கண்டதேவி குங்கும காளியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமத்தில் உள்ள குங்கும காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமத்தில் உள்ள குங்கும காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

இக்கோயில் திருவிழா கடந்த ஜூன் 20 ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விசேஷ அலங்காரத்துக்குப் பின் காளியம்மன் தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டாா். தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரடியிலிருந்து புறப்பட்ட தேரானது, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பின் நிலையை அடைந்தது.

தேரோட்ட விழாவில், கண்டதேவி, தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com