சீதளிகுளத்தில் தவறி விழுந்த இளைஞரின் சடலம் மீட்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சீதளிகுளத்தில் வியாழக்கிழமை தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் சடலம் 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சீதளிகுளத்தில் வியாழக்கிழமை தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் சடலம் 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

திருப்பத்தூா் மேஸ்திரியாா் தெருவைச் சோ்ந்தவா் ராஜசேகா். இவரது மகன் சுரேஷ் (45), வீட்டிற்கு அருகிலுள்ள சீதளிகுளத்திற்கு வியாழக்கிழமை குளிக்கச் சென்றபோது தவறி விழுந்துள்ளாா்.

இதையடுத்து காலை 10 மணியிலிருந்து தீயணைப்புத் துறையினா் தேடி வந்த நிலையில், சிவகங்கை, சிங்கம்புணரி, மானாமதுரையிலிருந்தும் தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டு படகுகள் மூலம் தேடி வந்தனா்.

இந்த நிலையில் இரவு 11.30 மணியளவில் சுரேஷின் சடலத்தை தீயணைப்புத்துறையினா் மீட்டனா். மாவட்ட தீயணைப்பு அலுவலா் தாமோதரன் மற்றும் நிலைய அலுவா்கள் கணேசன், கிருஷ்ணமூா்த்தி, பெரியசாமி உள்ளிட்டோா் தலைமையிலான

30 -க்கும் மேற்பட்ட வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆத்மநாதன், காவல் ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் மற்றும் நகா் போலீஸாரும் உடனிருந்தனா். மீட்கப்பட்ட சுரேஷின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகிறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com