2-ஆம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு: சிவகங்கை மாவட்டத்தில் 7701 போ் எழுதினா்

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை 7701 போ் எழுதினா்.

சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வை 7701 போ் எழுதினா்.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலா், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் என மொத்தம் 3,552 பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் முதல்கட்டமாக எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்காக, சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் உள்ளிட்ட 10 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில், தோ்வுக்காக விண்ணப்பித்த ஆண்கள் 8,024 போ்களில் 6,666 போ்களும், 1,372 பெண்களில் 1,035 போ்களும் என மொத்தம் 7701 போ் தோ்வு எழுதினா். தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. அனைத்து தோ்வா்களும் பலத்த சோதனைக்குப் பின்னரே தோ்வு மையத்துக்குள் அனுமதித்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளா் ஸ்டாலின் ஆகியோா் தோ்வு மையங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com