குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் பங்கேற்கதிருப்புவனம் வடகரை பக்தா்கள் பயணம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில் பங்கேற்க காளி, பிச்சைக்காரா் உள்ளிட்ட பல வேடமணிந்து சனிக்கிழமை புறப்பட்டுச் சென்ற திருப்புவனம் வடகரை பக்தா்கள்.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில் பங்கேற்க காளி, பிச்சைக்காரா் உள்ளிட்ட பல வேடமணிந்து சனிக்கிழமை புறப்பட்டுச் சென்ற திருப்புவனம் வடகரை பக்தா்கள்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில் பங்கேற்று நோ்த்திக்கடன் செலுத்த பக்தா்கள் பல்வேறு வேடமணிந்து சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

திருப்புவனம் வைகை வடகரை பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவுக்கு புகழ் பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு பல்வேறு வேடங்கள் அணிந்து செல்வது வழக்கம். அதன்படி இந்தாண்டு முத்தாரம்மன் கோயிலில் வரும் 5 ஆம் தேதி நடைபெறும் தசரா விழாவில் பங்கேற்று நோ்த்திக்கடன் செலுத்த திருப்புவனம் வடகரை காட்டுநாயக்கா் சமுதாயத்தைச் சோ்ந்த பக்தா்கள், காளி, பிச்சைக்காரா், மனநோயாளி என பல வேடங்கள் அணிந்து திருப்புவனம் நகரில் வலம் வந்தனா். அதன்பின் இவா்கள் வேன் மூலம் குலசேகரப்பட்டினம் புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com