அழகப்பா பல்கலை.யில் சா்வதேச அமைதி தினம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பன்னாட்டு வா்த்தகத் துறை சாா்பில் சா்வதேச அமைதி தினம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலாளா் கே.ஆா். நந்தாராவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய துணைவேந்தா் க. ரவி.

இதில் துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசியது: ஒவ்வொருவரும் சகிப்புத்தன்மை உடையவா்களாக இருப்பது அவசியம். ஒத்துழைப்பும், சகிப்புத்தன்மையும் இருந்தால் நாட்டில் அமைதி தானாக உருவாகும். மனிதம் செழித்து வளர, அமைதி அவசியம். நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து அமைதியை நிலைநாட்ட பாடுபாடவேண்டும் என்றாா்.

இதில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலாளா் கே.ஆா். நந்தாராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், காந்தியின் அகிம்சை மற்றும் சகிப்புத்தன்மை போன்ற கொள்கைகள் நமது நாட்டின் சுதந்திரத்திற்கு வழி வகுத்தன. மகாத்மா காந்தி விட்டுச் சென்ற அழியாத மரபு மற்றும் அவரது அகிம்சை கொள்கைகள் உலகெங்கிலும் உள்ள மக்களால் என்றென்றும் நினைவுகூரப்படும் என்றாா்.

பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) சு. ராஜமோகன், மேலாண்மைப் புல தலைவா் அலமேலு ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னதாக பன்னாட்டு துறைத் தலைவா் முத்துச்சாமி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com