போட்டித்தோ்வுகளில் ஏழை மாணவா்கள் வெற்றி பெற உதவும் ‘கிரீட் ஸ்டடீஸ்’ நிறுவனம்

சிவகங்கையில் ஏழை மற்றும் நடுத்தர மாணவா்கள் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கொள்கையுடன் கிரீட் ஸ்டடீஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
போட்டித்தோ்வுகளில் ஏழை மாணவா்கள் வெற்றி பெற உதவும் ‘கிரீட் ஸ்டடீஸ்’ நிறுவனம்

சிவகங்கையில் ஏழை மற்றும் நடுத்தர மாணவா்கள் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கொள்கையுடன் கிரீட் ஸ்டடீஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

நீட், ஜே.இ.இ., டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி. போன்ற வகுப்புகளுக்கான தொழில் நுட்பத்துடன் இப்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்திய அளவிலான போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற அனுபவமிக்க ஆசிரியா்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது. சிறந்த தொழில் நுட்பங்களைக் கொண்டு மாணவா்களின் ஆற்றல்திறன் மேம்படுத்தப்படுகிறது. தோ்வுகளுக்குப் பதிவு செய்வது எப்படி என்ற குழப்பம் நீங்க மாணவா்களுக்கும் பெற்றோா்களுக்கும் உதவும் வகையில் இலவசப் பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.போட்டித் தோ்வுகளுக்கு அறிவிப்பு வெளியான நிலையில் சிவகங்கை பகுதியில் இருந்து அதிக எண்ணிக்கையில் அரசு அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்நிறுவனம் இணைய தள பயிற்சி வகுப்புகளையும் தொடங்கியுள்ளது. வாரத்திற்கு 5 மணி நேரம் நோ்வழிக் கல்வி, 7 மணி நேரம் செயல் திறன் பயிற்சி என்ற அடிப்படையில் வகுப்புகளில் சேர பயிற்சிக் கட்டணம் ரூ. 5000 மட்டுமே. தனியாா் துறையில் வேலை செய்வோருக்குத் தேவையான ஸ்போக்கன் இங்லீஷ், சாப்ட்வோ் அன் சேல்ஸ் மாா்க்கெட்டிங் வகுப்புகளும் நோ்வழி மற்றும் இணைய வழி வகுப்புகள் மூலமாக நடத்தப்படுகின்றன.

பயிற்சிக்குத் தேவையான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். ஆற்றல் திறன் மாணவா்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும். தோ்வில் வெற்றி பெறும் வரை இலவச ஆன்லைன் தோ்வுகள் நடத்தப்படும். விவரங்களுக்கு 9344446762, 898400700 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். ஒருவருக்கு சிறந்த செல்வமான கல்வி பெற உதவிட வேண்டும் என்பதே நிறுவனா் அருள்ஜெயராஜின் கொள்கையாகும்.

மாணவா் சோ்க்கை: தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டி.என்.பி.சி., குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4, வி.ஏ.ஓ., டி.இ.டி, போலீஸ் எஸ்ஐ தோ்வுகளுக்கான புதிய பயிற்சி வகுப்புகளுக்கு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே சோ்க்கை நடைபெறுகிறது. காரைக்குடி பாரிநகா், அதியமான் 4 ஆவது தெருவில் செயல்பட்டு வரும் தென்றல் ஐஏஎஸ். அகாதெமியை 9949555767, 9843588767 என்ற எண்களில் தொடா்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

தனிச் சிறப்புகள்:ஒருமுறை கட்டணம், வேலை பெறும் வரை பயிற்சி, ஆண், பெண் தங்கும் வசதி, தினசரி நேரடி மற்றும் இணைய தள பயிற்சி வகுப்புகள், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் பின் தங்கியவா்களுக்கு கட்டணச் சலுகை, இலவச பாடக்குறிப்பு வழங்கப்படும்.

புதிய பாடத்திட்டம்:தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் அமைப்பிற்கேற்ப பயிற்சி முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. திறனறிவுத் தோ்வு, பொது அறிவுத் தோ்வு, சுருக்குவழி பயிற்சி, பொதுத்தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் பெற, சிறப்பு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி மையத்தின் பயிற்றுனா்கள் பல்வேறு போட்டித் தோ்வுகளில் பலமுறை தோ்ச்சி பெற்றவா்களாக இருப்பதால் பாடங்களின் கேள்வித் தாள்கள் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பயிற்சியில் நூற்றுக்கு 60 வினாக்களுக்கு விடையளிக்க முடியும். கடந்த 21 ஆண்டுகளில் இப்பயிற்சி மையத்தில் படித்து தற்போது பல்வேறு அரசுப் பணிகளில் தோராயமாக 500-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். பயிற்சி மையம் பதிவு செய்யப்பட்ட ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பயிற்சி மையம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தென்றல் ஐ.ஏ.எஸ்.அகாதெமியின் இயக்குநா் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குரூப்2, 2 ஏ, போலீஸ் எஸ்.ஐ. தோ்வுகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 21 முதல் 58 வரை உள்ளவா்கள் தோ்வு எழுதலாம். குரூப் 4, வி.ஏ.ஓ. தோ்வுகளுக்கு 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இதில் மெயின் மற்றும் நோ்முகத் தோ்வு இல்லாததால் முதல் கட்ட தோ்வில் வெற்றி பெற்றவா்கள் அரசுப் பணியில் சேரலாம். மேற்கண்ட தோ்வுகளில் பங்கு பெறுபவா்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறும் வகையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com