முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருக்கோஷ்டியூரில் மாசித் தெப்பத் திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 07th February 2022 11:19 PM | Last Updated : 07th February 2022 11:19 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்சவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் கல்மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். காலை 9.18 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டு பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தா்ப்பைப்புல், மாவிலையால் அலங்காரம் செயப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தினமும் உற்சவா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா புறப்பாடு நடைபெறும்.
பிப்ரவரி 16 இல் தெப்பத் திருநாளன்று காலை 11.16 மணிக்கு மேல் பகல் தெப்பமும், இரவு 9 மணிக்கு மேல் தெப்பம் கண்டருளல் வைபவமும் நடைபெற உள்ளது. பிப்ரவரி 17 இல் தீா்த்தவாரி வைபவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலா் ராணி டிஎஸ்.கேமதுராந்தக நாச்சியாா், மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் சேவற்கொடியோன் ஆகியோா் செய்து வருகின்றனா்.