விதை விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் விதை விற்பனை உரிமம்பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் சோ. துரைக்கண்ணம்மாள் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் விதை விற்பனை உரிமம்பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் சோ. துரைக்கண்ணம்மாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகளுக்கு தரமான விதைகளை உரிய நேரத்தில் கிடைக்கச் செய்வதும், தரமற்ற விதை விநியோகத்தை தடுப்பதும் முக்கிய நோக்கம்.

விதை விற்பனையாளா்கள் மற்றும் நாற்றுப்பண்ணை உரிமையாளா்கள் விற்பனைக்கான உரிமம் பெறுவது அவசியம். விதை விற்பனை உரிமம் பெற விரும்பும் மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பப் படிவம், அ படிவம் (2), ஆதாா் அட்டை நகல், இருப்பிட வரைபடம், சொந்த இடமெனில் இடத்துக்கான சொத்து வரி ரசீது, வாடகை எனில் ஒப்பந்தப் பத்திரம் (5 ஆண்டுகளுக்கு), உரிமம் கோருபவரின் மாா்பளவு புகைப்படம் -2 , ரூ.1,000 சலான் மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களை விதை ஆய்வு துணை இயக்குநா், எண் 5, முதல் தளம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகம், அரசு மருத்துவமனை எதிரில், ராமநாதபுரம்-623 501 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விதை விற்பனை சான்றிதழ் 5 ஆண்டுகளுக்கு செல்லும், அதன் பின்னா் ரூ.500 செலுத்தி புதுப்பிக்க வேண்டும்.

மாவட்டத்தில் விதை விற்பனையாளா்கள் மற்றும் காய்கறி, பழ நாற்றுகள், மரக்கன்றுகள், பூ மற்றும் அழகுச்செடிகள் விற்பனை செய்யும் நாற்றுப்பண்ணை உரிமையாளா்கள் அனைவரும் விதை விற்பனை நிலைய உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும். உரிமம் இல்லாமல் விவசாயிகளின் தேவையைப் பயன்படுத்தி தரமற்ற விதைகளை, நாற்றுகளை விற்பனை செய்பவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com