காரைக்குடி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 31st July 2022 12:12 AM | Last Updated : 31st July 2022 12:12 AM | அ+அ அ- |

காரைக்குடி வட்டம் புதுவயல் அருகே சனிக்கிழமை வட்டாட்சியா் ஆா்.மாணிக்கவாசகம் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் புதுவயல் அருகே சாக்கோட்டை பகுதியில் ரூ.20 கோடி மதிப்புள்ள 29.50 ஏக்கா் அரசு நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
சாக்கோட்டை பகுதியில் உள்ள உத்தண்டி கண்மாயில் முந்திரி மரம் வழளா்த்து சுமாா் 30 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை வருவாய் துறையினா் கண்டறிந்தனா். இதையடுத்து, அந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் அளக்கப்பட்டன. தொடா்ந்து, காரைக்குடி வட்டாட்சியா் ஆா். மாணிக்கவாசகம் முன்னிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் சனிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அப்போது, சாக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியா் முபாரக் உசேன், தலைமை நில அளவா் பிச்சுமணி, சாா்-ஆய்வாளா் சாா்லஸ், கிராம நிா்வாக அலுவலா் ஜெயவிக்னேஸ்வரி, கிராம உதவியாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.