வேம்பத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

மானாமதுரை ஒன்றியம் திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூரில் எழுந்தருளியுள்ள  ஸ்ரீ ஆவுடை நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் கண்டு தரிசிக்க
திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூரில்   ஆவுடை நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூரில் ஆவுடை நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

மானாமதுரை ஒன்றியம் திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூரில் எழுந்தருளியுள்ள  ஸ்ரீ ஆவுடை நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் கண்டு தரிசிக்க குடமுழுக்கு விழா பல ஆண்டுகளுக்குப் பின்னர் சிறப்பாக நடைபெற்றது. 
திருக்கயிலாயத்துக்கு நிகராக கருதப்படும் வேம்பத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் கடந்த 1945 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் கோயிலில் குடமுழுக்கு விழா நடத்தப்படாதததால் இக்கோயில் புனரமைக்கப் படாமல் இருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது சிவனடியார்கள் சேர்ந்து இக்கோயிலை புனரமைத்து 76 ஆண்டுகளுக்குப்பின் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. 

குடமுழுக்கு விழாவை கண்டு தரிசித்த பக்தர்கள்.

குடமுழுக்கு விழாவையொட்டி கோயில் அருகே யாகசாலை அமைத்து அதில் புனித நீர் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான சிவாச்சாரியார்கள் கூடி யாக பூஜையை நடத்தினர். குடமுழுக்கு விழாவின்போது நான்காம் கால பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதியாகி  மங்கள ஆரத்தி காட்டப்பட்டதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. 
அதன் பின் வானத்தில் கருட பகவான் வட்டமிட்டு தரிசனம் தர சிவனடியார்கள் கூடி கயிலாய வாத்தியங்கள் முழங்கவும் திரளான பக்தர்கள் கண்டு தரிசிக்கவும் காலை 7.35 மணிக்கு மூலவர் கைலாசநாதர் விமானக் கலசம் ஆவுடை நாயகி மூலவர் விமானக் கலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் கலச நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்தி வைக்கப்பட்டது. 

குடமுழுக்கு விழாவில் கைலாய வாத்தியம் இசைத்த சிவனடியார்கள்.

அதன்பின் விமான கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் மீது கலச நீர் தெளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மூலவர் கைலாசநாதர் ஆவுடை நாயகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயிலில்  அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com