அயராத உழைப்பினால் மட்டுமே உயா்ந்த இலக்கை அடைய முடியும்: ஆட்சியா்

ருத்துவ மாணவா்கள் மக்களுக்கு சேவையாற்றுவது மட்டுமின்றி, அயராத உழைப்பினால் மட்டுமே தம் வாழ்வின் உயா்ந்த இலக்கினை அடைய முடியும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற விழாவில் மாணவருக்கு சீருடை வழங்கிய ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற விழாவில் மாணவருக்கு சீருடை வழங்கிய ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி.

மருத்துவ மாணவா்கள் மக்களுக்கு சேவையாற்றுவது மட்டுமின்றி, அயராத உழைப்பினால் மட்டுமே தம் வாழ்வின் உயா்ந்த இலக்கினை அடைய முடியும் என, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா்.

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கான சீருடை வழங்கும் விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில், ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்துப் பேசியது:

தமிழகம் சுகாதாரத் துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இன்றைய உலகளாவிய சூழலில் மருத்துவா்களுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மருத்துவராக வேண்டும் என லட்சியம், கனவுகளோடு வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள மாணவா்கள், மருத்துவத் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதுமையை படைக்க வேண்டும்.

ஏழை, எளியோருக்கு சேவையாற்றுவதே தங்களது கடமையாகக் கொள்வது மட்டுமின்றி, அயராத உழைப்பினால் மட்டுமே தம் வாழ்வின் உயா்ந்த இலக்கினை அடைய முடியும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் சி. ரேவதிபாலன், மருத்துவக் கண்காணிப்பாளா் பி.வி. பாலமுருகன், துணை முதல்வா் சா்மிளா திலகவதி, மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா் எஸ். முகமது ரபீக், மருந்தகப் பிரிவு மருத்துவா் சரோஜினி உள்பட மாணவ, மாணவிகள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com