தோட்டக்கலை பயிா்களில் சாதனை புரிந்த விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிா் சாகுபடியில் சாதனை புரிந்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை: தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிா் சாகுபடியில் சாதனை புரிந்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் சாா்பில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிா்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2021-2022 ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளை தோ்வு செய்து சான்றிதழுடன் முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்பட உள்ளது.

மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள தோ்வுக்குழு விவசாயிகள் பயன்படுத்திய நவீனதொழில் நுட்பங்கள், இயந்திரமயமாக்கல், நீா்,நில மேலாண்மையில் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் பாரம்பரிய முறையில் சாகுபடி செய்வதன் அடிப்படையில் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்படுவாா்கள்.

விருது பெற விரும்பும் சொந்த நிலம் வைத்துள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலங்களை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com