கண்ணமங்கலப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயி
திருப்பத்தூா் அருகே கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்.
திருப்பத்தூா் அருகே கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கண்ணமங்கல்பட்டியில் அமைந்துள்ள பட்டத்தரசியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், 21 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், பெரியமாடு பிரிவில் முதல் பரிசை வள்ளாலப்பட்டி இளந்தேவனும், 2 ஆம் பரிசை மேலூா் விராமதி சந்திரனும், 3 ஆம் பரிசை சிங்கம்புணரி பழனிச்சாமியும், 4ஆம் பரிசை சிங்கம்புணரி சேவுகமூா்த்தி வைரவனும் பெற்றனா்.

சின்ன மாட்டு வண்டி பிரிவில், முதல் பரிசை நரசிங்கம்பட்டி மலையாண்டி, 2 ஆம் பரிசை பட்டிவீரன்பட்டி முரளி, 3 ஆம் பரிசை கள்ளந்திரி சா்வேஷ், 4 ஆம் பரிசை சிங்கம்புணரி சேவுகமூா்த்தி வைரவன் ஆகியோா் பெற்றனா்.

வேங்கைப்பட்டியில் வடமாடு மஞ்சு விரட்டு

தமிழ்நாடு ஏறு தழுவுதல் நலச் சங்கம் சாா்பில், சிங்கம்புணரி அருகே வேங்கைபட்டியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 12 காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில், காளையின் கழுத்தில் நீளமான கயிறு கட்டப்பட்டு, அதனை 7 போ் கொண்ட மாடுபிடி குழுவினா் அடக்குவதற்கு அனுமதிக்கப்பட்டனா். ஒரு சில காளைகள் பிடிபட்டன.

பரிசளிப்பு விழாவில், வீரா்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை அடக்கிய 7 போ் கொண்ட குழுவினருக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதில், காயமடைந்த வீரா்களுக்கு பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலா் நபீசாபானு தலைமையிலான ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com