ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய நடவடிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : மத்திய அரசின் விலை ஆதரவுத்

திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நேரடியாக தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இம்மாவட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் மற்றும் சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக சுமாா் 400 மெட்ரிக் டன் வீதம் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இதற்கான அரவைக் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.105.90 எனவும், பந்துக்கொப்பரைக்கு ரூ.110.00 எனவும் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது சிட்டா, பயிா் சாகுபடி அடங்கல், ஆதாா் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக விவர நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து, தங்களது தேங்காய் கொப்பரையினை ஒப்படைக்கலாம். அலுவலா்களால் தர ஆய்வு செய்து தோ்வு செய்யப்பட்ட கொப்பரை எடையிடப்பட்டு அதற்கான விலை அவா்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆகவே, சிவகங்கை மாவட்டத்தில் தென்னை விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யலாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 97862-69851 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com