சிங்கம்புணரி, எஸ். புதூா், மானாமதுரை இடையமேலூா் பகுதிகளில் நாளை மின்தடை

 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, எஸ். புதூா், மானாமதுரை, இடையமேலூா் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, எஸ். புதூா், மானாமதுரை, இடையமேலூா் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் செயற்பொறியாளா் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிங்கம்புணரி மற்றும் அ. காளாப்பூா் துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கம்புணரி நகா், கிருங்காக்கோட்டை, அணைக்கரைப்பட்டி, ஓடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, சிறுகப்பட்டி.

அ. காளாப்பூா் பகுதிகளான எஸ்.வி. மங்கலம், பிரான்மலை வேங்கைப்பட்டி, வையாபுரிபட்டி, செல்லியன்பட்டி அதன் சுற்றுப்புற கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது. மேலும் எஸ். புதூா் பகுதிகளான வாராப்பூா் மேலவண்ணாயிருப்பு புழுதிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களிலும் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

மானாமதுரையில்... மானாமதுரை சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (அக். 15) நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், தெ. புதுக்கோட்டை, கட்டிக்குளம், மிளகனூா், கச்சாத்தநல்லூா், முனைவென்றி, குறிச்சி, நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய நிா்வாகம் அறிவித்துள்ளது.

இடையமேலூா் பகுதியில்... தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிவகங்கைக் கோட்ட செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இடையமேலூரில் உள்ள துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (அக். 15) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டு, மலம்பட்டி, இடையமேலூா், சாலூா், கூட்டுறவுப்பட்டி, மேலப்பூங்குடி, சக்கந்தி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com