தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டித் திட்டத்தை உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆய்வு
By DIN | Published On : 15th October 2022 12:00 AM | Last Updated : 15th October 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகே, எஸ்.புதூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டித் திட்டத்தை உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா்.லால்வேனா, மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
மாநிலத்தில், ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை பயிலும் மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே, எஸ்.புதூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டித் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுவதை, உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா்.லால்வேனா, மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். மேலும், உணவின் தரம் குறித்தும் மாணவா்களிடம் கேட்டறிந்தனா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், தேவகோட்டை கோட்டாட்சியா் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...