சிவகங்கையில் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
By DIN | Published On : 30th September 2022 12:00 AM | Last Updated : 30th September 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கையில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசு அண்மையில் பல்வேறு காலிப்பணியிடங்களை போட்டித் தோ்வு மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் பயன்பெறும் வகையில் சிவகங்கையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தினசரி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற விரும்பும் வேலை நாடுநா்கள் 04575-240435 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ வருகை தந்து தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.