குன்றக்குடியில் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா்.
குன்றக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற தைபூசத் திருவிழா தீா்த்தவாரி உற்சவத்தின்போது வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிக்கேடகத்தில் எழுந்தருளிய சண்முகநாதப்பெருமான்.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் கோயிலான இங்கு 10-ஆம் நாள் விழாவான தைப்பூச திருவிழாவையொட்டி காலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து வள்ளி, தெய்வானையுடன் சண்முகநாதப் பெருமான் வெள்ளிக்கேடகத்தில் சின்னக்குன்றக்குடி தேனாற்றில் எழுந்தருளினாா். அங்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் முன்னிலையில் தீா்த்தவாரி உற்சவம் நடை பெற்றது.

இதையொட்டி, சின்னகுன்றக்குடி திடலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை, புதுக் கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் லேசான காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com