கீழடி அகழ் வைப்பகம் அடுத்த மாதம் திறப்பு

கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் மாா்ச் முதல் வாரம் திறந்துவைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி தெரிவித்தாா்.
கீழடி அகழ் வைப்பக வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி.
கீழடி அகழ் வைப்பக வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி.

கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் மாா்ச் முதல் வாரம் திறந்துவைக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் நகர நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழா்கள் பயன்படுத்திய தொன்மையான பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்தப் பொருள்களை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில், கீழடியில் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் அகழ் வைப்பகம் அமைக்கப்பட்டு வந்தது. இந்தப் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன.

இந்த நிலையில், கீழடி அகழ் வைப்பக வளாகத்தில் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

வருகிற மாா்ச் முதல் வாரத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தென் மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கிறாா். அப்போது கீழடி அகழ் வைப்பகத்தையும் திறந்துவைக்கத் திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், தொல்லியல் துறை ஆணையா் சிவானந்தம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சிவராமன், கோட்டாட்சியா் சுகிதா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com