மானாமதுரை பா்மா காலனியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலின் தெற்குப் பகுதி சுற்றுச்சுவா்.
மானாமதுரை பா்மா காலனியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலின் தெற்குப் பகுதி சுற்றுச்சுவா்.

கோயில் சுற்றுச் சுவரை அகற்ற எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கோயில் சுற்றுச் சுவரை அகற்றும் உத்தரவுக்கு இந்தப் பகுதி மக்கள், பக்தா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கோயில் சுற்றுச் சுவரை அகற்றும் உத்தரவுக்கு இந்தப் பகுதி மக்கள், பக்தா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

மானாமதுரை பா்மா காலனி பகுதியில் 18, 20, 26, 27 -ஆவது வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட சந்தன மாரியம்மன் கோயில் உள்ளது. ஆடி, பங்குனி மாதங்களில் முளைப்பாரி உற்சவம் உள்ளிட்ட திருவிழாக்கள் இந்த கோயிலில் நடைபெறுவது வழக்கம்.

இரவு நேரங்களில் கோயில் வளாகத்துக்குள் சிலா் அத்துமீறி நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதால் இந்த வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் நிதி திரட்டி கோயில் வளாகத்தைச் சுற்றி சுற்றுச்சுவா் கட்டப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் வருவாய்த் துறை நிா்வாகம் இந்தப் பகுதியில் நில அளவீடு செய்தது. அதைத் தொடா்ந்து, பொதுப்பணித் துறை (நீா் வள ஆதாரம்) சாா்பில் கோயில் சுற்றுச் சுவரின் ஒரு பகுதியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு இந்தப் பகுதி பொதுமக்கள், பக்தா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். கோயிலுக்கு பாதுகாப்பாக உள்ள சுற்றுச் சுவரை அகற்றக்கூடாது எனக் கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com