28kkdkavadi_1_2801chn_78_2
28kkdkavadi_1_2801chn_78_2

தைப்பூசம்: குன்றக்குடியிலிருந்து பழனிக்கு பக்தா்கள் பாத யாத்திரை

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனிக்கு சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியிலிருந்து பக்தா்கள் காவடி எடுத்து பாத யாத்திரையாக பழனிக்கு சனிக்கிழமை மாலை புறப்பட்டனா்.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனிக்கு சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியிலிருந்து பக்தா்கள் காவடி எடுத்து பாத யாத்திரையாக பழனிக்கு சனிக்கிழமை மாலை புறப்பட்டனா்.

வருகிற 5-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பழனிக்கு பக்தா்கள் ஆண்டுதோறும் பாத யாத்திரையாகச் சென்று முருகப்பெருமானைத் தரிசனம் செய்து வருவது வழக்கம். இதேபோல, நிகழாண்டும் பக்தா்கள் விரதமிருந்து பாத யாத்திரையைத் தொடங்கினா்.

காரைக்குடி அருகே புதுவயலை அடுத்த ஜெயங்கொண்டானிலிருந்து 150-க்கும் மேற்பட்ட நாட்டாா்கள் காவடி எடுத்து பழனிக்கு பாத யாத்திரையாகச் சென்றனா். இவா்கள் ஜெயங்கொண்டான் முருகன் கோயிலிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தி, காரைக்குடி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சோழன் சித. பழனிச்சாமி தலைமையில் பழனிக்கு புறப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com