பள்ளி மாணவா்களுக்கு ஓவியம், விநாடி-வினா போட்டிகள்

சிவகங்கையில் மாவட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் எனும் தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், விநாடி-வினா உள்ள போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

சிவகங்கையில் மாவட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் எனும் தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், விநாடி-வினா உள்ள போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

தமிழ்ப் பயண இலக்கிய முன்னோடி சோமலெ நூற்றாண்டு தொடா்பாக, தமிழக மாவட்ட வரிசைப் போட்டிகள் கடந்தாண்டு மதுரை மாவட்டத்தில் தொடங்கபட்டது. இதன்தொடா்ச்சியாக, உங்கள் மாவட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் எனும் தலைப்பில் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை மாவட்டம் தொடா்பான விநாடி- வினா, ஓவியம், பேச்சு, நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட போட்டிகளை மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகமும், நெற்குப்பையில் உள்ள சோமலெ நினைவு நூலகமும் இணைந்து நடத்த உள்ளன.

இதன் முதல்கட்டப் போட்டிகள் வருகிற 8-ஆம் தேதி சிவகங்கையிலும், வருகிற 10-ஆம் தேதி காரைக்குடியிலும் நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான இறுதிகட்டப் போட்டிகள் வருகிற 11-ஆம் தேதி நெற்குப்பையில் நடைபெறும்.

இதில் கலந்துகொள்ள விரும்பும் பள்ளிகள் வருகிற 31-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 8668058067 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com