பழனிக்கு பாளைய நாட்டாா் காவடிகள்

பழனிக்கு பாளைய நாட்டாா் காவடிகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வழியாக பாளைய நாட்டாா் காவடிக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பழனிக்கு யாத்திரை மேற்கொண்டனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வழியாக பாளைய நாட்டாா் காவடிக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பழனிக்கு யாத்திரை மேற்கொண்டனா்.

இவா்கள் 45-ஆவது ஆண்டாக இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனா்.

குன்றக்குடியில் ஞாயிற்றுக்கிழமை வேல் பூஜை முடித்து, குருசாமி முருகுசோலை, சண்முக சேவா சங்கத் தலைவா் துரைசிங்கம் ஆகியோா் தலைமையில் பயணத்தைத் தொடங்கினா். பள்ளத்தூா், நேமத்தான்பட்டி, கானாடுகாத்தான், கொத்தரி, மணச்சை, வடகுடி, கரியபட்டி, கண்டனூா், பாளையூா், வேலங்குடி, கோட்டையூா், காரைக்குடி, கழனிவாசல், ஓ.சிறுவயல் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 177 போ் காவடி சுமந்து செல்கின்றனா். காவடிகள் ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில் திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தை வந்தடைந்தன.

சுவாமி வழிபாட்டுக்குப் பிறகு காவடிகளுக்கு பெண்கள் குலவையிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றனா். நண்பகல் 12 மணியளவில் காவடிகள் மருதிப்பட்டியை அடைந்தன.

பின்னா் சிங்கம்புணரி, சமுத்திராபட்டி, திண்டுக்கல் வழியாக பிப்.3-இல் பழனியை அடைந்து, சண்முகசேவா மடத்தில் மகேஸ்வர பூஜை, காவடிபூஜை, அன்னதானம் முடித்து, தைப்பூசத்துக்கு மறுநாள் மலையேறி சுவாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com