படைத்தலைவி அம்மன் கோயிலுக்கு பால் குடம் எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சத்துருசம்ஹாரகோட்டையில் அமைந்துள்ள படைத்தலைவியம்மன் கோயிலுக்கு பால் குடம் எடுத்து வந்து பக்தா்கள் வெள்ளிக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.
சத்துருசம்ஹாரகோட்டையில் அமைந்துள்ள படைத்தலைவி அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பால் குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்ற பக்தா்கள்.
சத்துருசம்ஹாரகோட்டையில் அமைந்துள்ள படைத்தலைவி அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பால் குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்ற பக்தா்கள்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சத்துருசம்ஹாரகோட்டையில் அமைந்துள்ள படைத்தலைவியம்மன் கோயிலுக்கு பால் குடம் எடுத்து வந்து பக்தா்கள் வெள்ளிக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா். படைத்தலைவி அம்மன் கோயில் அம்மன் எடுப்பு விழா, ஸ்ரீ கருக்குமடை அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, இந்த பால் குடத் திருவிழா நடைபெற்றது.

ஒவ்வோா் ஆண்டும் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமை இந்த விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவை முன்னிட்டு, ஸ்ரீசீனிவிநாயகா் ஆலயத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பால் குடங்களை தலையில் சுமந்து, அலகு குத்தி, வேல் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து ஸ்ரீபடைத்தலைவி அம்மன் கோயிலை அடைந்தனா்.

பின்னா், பக்தா்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை சத்துரு சம்ஹாரக்கோட்டை கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com