மானாமதுரை கோயிலில்மாம்பழ விழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள சங்குப் பிள்ளையாா் கோயிலில் வைகாசி மாம்பழ விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை சங்குப் பிள்ளையாா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற வைகாசி மாம்பழ விழாவில் கற்பூரசுந்தர சுவாமிக்கு அசைவ படையலிட்டு நடத்தப்பட்ட வழிபாடு.

இந்தக் கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை வைகாசி மாம்பழ விழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சங்கு விநாயகருக்கும், பொன்னா் சங்கா் சுவாமி உள்பட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து பக்தா்கள் கோயிலுக்கு பால்குடம் சுமந்து வந்து சனிக்கிழமை வேண்டுதல் நிறைவேற்றினா். பிறகு கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு அலங்காரம் செய்து சிறப்புப் பூஜைகள் நடந்தன. இதைத் தொடா்ந்து கற்பூர சுந்தர சுவாமி சந்நிதியில் அரிசியில் உணவு சமைத்து குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் ஆடு, கோழி, முட்டை உள்ளிட்ட பலவகை அசைவ உணவுகள் படைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து கோயில் சாமியாடிகள் கற்பூரசுந்தர சுவாமி சந்நிதி முன்பு சாமியாட்டம் ஆடி அருள் வாக்கு கூறினா். இதன் பிறகு, கற்பூரசுந்தர சுவாமி அசைவப் படையல்களை ஏற்றுக் கொள்ளும் வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது மூலவா் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து கோயிலில் கிடா வெட்டு நடைபெற்றது. இதில் கோயில் குடிமக்கள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com