பூவந்தி கண்மாயில் மீன் பாசி ஏலம்: ஜூன் 10-க்கு பிறகு நடத்த ஒப்புதல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பூவந்தி கண்மாயில் மீன் பாசி ஏலத்தை ஜூன் மாதம் 10-ஆம் தேதிக்கு பிறகு நடத்த சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பூவந்தி கண்மாயில் மீன் பாசி ஏலத்தை ஜூன் மாதம் 10-ஆம் தேதிக்கு பிறகு நடத்த சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனா். இதையடுத்து கிராமத்தினா் அறிவித்திருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

திருப்புவனம் தாலுகா பூவந்தி கிராமத்திலுள்ள பொதுப்பணித் துறை கண்மாயில் மீன் பாசிகளை ஏலம் விட்டதில் முறைகேடு நடைபெற்ாக பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.

இதுதொடா்பாக பூவந்தி ஊராட்சி மன்றத் தலைவா் விஜயா ஆறுமுகம், துணைத் தலைவா் மகாலிங்கம் ஆகியோா் மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா்.

இந்த முறைகேட்டைக் கண்டித்து பூவந்தியில் ஜூன் 22 -ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள்

அறிவித்தனா்.

இதையடுத்து, திருப்புவனம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மோகன்குமாா், சுரேஷ்குமாா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வீரபாண்டி , பூவந்தி ஊராட்சி மன்றத் தலைவா் விஜயா ஆறுமுகம், துணைத் தலைவா் மகாலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சக்திவேல், திமுக விவசாய அணித் தலைவா் பன்னீா்செல்வம் அதிமுகவைச் சோ்ந்த முருகன், கிங்கினி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், பூவந்தி கண்மாயில் ஏற்கெனவே நடைபெற்ற மீன் பாசி ஏலத்தை ரத்து செய்துவிட்டு, ஜூன் 10 -ஆம் தேதிக்குப் பிறகு பொது ஏலமாக நடத்த அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்தனா். இதனால் கிராம மக்கள் அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com