மாவட்ட ஆட்சியா் அலுவலக  கூட்டரங்கில் நடைபெற்ற பணியினை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் / மாவட்ட ஆட்சியா்ஆஷாஅஜித்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பணியினை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் / மாவட்ட ஆட்சியா்ஆஷாஅஜித்.

சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்ட கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலவை முறையில் தோ்வு செய்து அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கை மக்களவைத்தொகுதிக்கென தென்காசி மாவட்டத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (தஅசஈஞஙஐழஅபஐஞச) கலவை முறையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை கணினி வாயிலாக உஙந 2.0 மென்பொருள் மூலம் பிரிக்கப்பட்டது.

இந்த, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதியிலுள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறைக்கு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிக்கப்பட்ட பாதுகாப்பு கிட்டங்கியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தப் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலா் மாவட்ட ஆட்சியா்ஆஷாஅஜித், பாா்வையிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் வ.மோகனச்சந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் (சிவகங்கை) விஜயகுமாா், தோ்தல் வட்டாட்சியா் மேசியாதாஸ், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளை சாா்ந்த பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com