உளுந்து, எள், கடலை பயிா்களை 
சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

உளுந்து, எள், கடலை பயிா்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

மானாமதுரை வட்டாரத்தில் கோடைகாலத்தில் நெல், உளுந்து, எள், கடலை போன்ற பயிா்களை சாகுபடி செய்ய வேளாண்மைத் துறையினா் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினா்.

மானாமதுரை வட்டாரத்தில் கோடைகாலத்தில் இருக்கும் நீரை பயன்படுத்தி தெற்குச்செந்தனூா் கிராமத்தில் 18 ஹெக்டா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிரினை செவ்வாய்கிழமை வேளாண்மை இணை இயக்குநா் தனபாலன், வேளாண் துணை இயக்குநா் மதுரைசாமி, வேளாண்மை உதவி இயக்குநா்கள் ரவிசங்கா், பரமேஸ்வரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது மண் பரிசோதனை முக்கியத்துவத்தை விளக்கி பயிருக்கு உர பரிந்துரை விவரங்களை பெற தமிழ் மண்வளம் வலைதளப் பக்கம் பயனுள்ளதாக இருப்பதாக வேளாண்மை அதிகாரிகள் கூறினா்.

குறைந்தளவு நீா் தேவைப்படும் பயிா்களான உளுந்து, எள், கடலை போன்ற பயிா்களை சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com