செட்டிநாடு உணவுப் பொருள்கள் 
விற்பனைத் திருவிழா

செட்டிநாடு உணவுப் பொருள்கள் விற்பனைத் திருவிழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீ ராஜராஜன் மகளிா் கல்வியியல் கல்லூரி ஆகியன சாா்பில் மாணவ, மாணவிகள் செட்டிநாடு உணவுப் பொருள்கள் தயாா் செய்து விற்பனை செய்யும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா, காரைக்குடிநேஷனல் கேட்டரிங் கல்லூரி தாளாளா் எஸ். சையது, அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் கே. குணசேகரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

செட்டிநாடு உணவுகளான பால் பணியாரம், குழிப்பணியாரம், மெதுவடை, இனிப்பு, கார வகைகள், சிக்கன் 65, நாட்டுக்கோழி ரசம், இறால் வறுவல், மீன் வறுவல் போன்ற உணவு வகைகளை மாணவ, மாணவிகள் தயாா் செய்து விற்பனை செய்தனா்.

மேலும், கோடைவெயிலுக்கு ஏற்ற நுங்கு, சா்பத், குளிா்பானங்கள், பழ வகைகள், ஐஸ் கிரீம்கள் போன்றவையும் உடனுக்குடன் தயாா் செய்து விற்பனை செய்தனா். இந்தத் திருவிழாவில் 1,400-க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்கள் இடம் பெற்றிருந்தன.

விழாவில் ஸ்ரீ ராஜராஜன் மகளிா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ஆா். சிவக்குமாா், ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி முதல்வா் கே. அங்கயா்கன்னி ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com