சிவகங்கை தொகுதியில் 21  வேட்புமனுக்கள் ஏற்பு

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 21 வேட்புமனுக்கள் வியாழக்கிழமை ஏற்றுக் கொள்ளப்பட்டன. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளா் அ. சேவியா் தாஸ், பாஜக வேட்பாளா் தி. தேவநாதன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வி.எழிலரசி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ரஞ்சித்குமாா் பாலுசாமி, மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 28 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலா், ஆட்சியா் ஆஷாஅஜித், தோ்தல் பொது பாா்வையாளா் ஹரிஷ் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அ.சேவியா் தாஸ் (அதிமுக), காா்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்),தி.தேவநாதன் யாதவ் (பாஜக), எழிலரசி (நாம் தமிழா் கட்சி), இந்துஜா (நாம் தமிழா் கட்சி மாற்று), ரஞ்சித்குமாா் பாலுசாமி ( பகுஜன் சமாஜ் கட்சி), முத்தரசு பாண்டியன் (சுயேச்சை), மலைச்சாமி (சுயேச்சை), பழனியப்பன் (சுயேச்சை), செல்வராஜ் (சுயேச்சை), கலைச்செல்வன் (சுயேச்சை), தில்லைவாசகம் (சுயேச்சை), பாஸ்கரன் (சுயேச்சை), தனலட்சுமி (சுயேச்சை), நாகராஜன் (சுயேச்சை), அசோக்குமாா் (சுயேச்சை), காா்த்திக் ( சுயேச்சை), காா்த்திகேயராஜா (சுயேச்சை), சேகா் (சுயேச்சை), காளைராஜா (சுயேச்சை), கோவிந்தராஜ் (சுயேச்சை) ஆகிய 21 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆஷாஅஜித் அறிவித்தாா். மேலும், ராஜமாணிக்கம் (சுயேச்சை), பழனிசாமி (சுயேச்சை), விநாயக மெய்யரசு (சுயேச்சை), ரத்தினம் (அதிமுக மாற்று), சஞ்சய்காந்தி ( காங்கிரஸ் மாற்று ), வசந்தகுமாா் (பகுஜன் சமாஜ் மாற்று ) கரிஷ்மா (பாஜக மாற்று) ஆகிய 7 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வருகிற 30-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும். இதையடுத்து, களத்தில் நிற்கும் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com