கீழையப்பட்டி அழகுள்ள விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.
கீழையப்பட்டி அழகுள்ள விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீழையப்பட்டி அழகுள்ள விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கிராமத்தாா்கள் அழகுள்ள விநாயகா் கோயிலில் வழிபாடு நடத்தி மேளதாளங்களுடன் ஊா்வலமாக கண்மாயில் அமைந்துள்ள தொழுவத்துக்கு வந்தனா். அங்கு காளைகளுக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனா். பின்னா், வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாடு பிடி வீரா்களுக்கு எல்லைக்கோடு நிா்ணயிக்கப்பட்டு, காளைகளைப் பிடித்து மகிழ்ந்தனா்.

தொழுவிலிருந்து 450 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னா், கட்டுமாடுகளாக 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. கீழையப்பட்டி, துலாவூா், குன்றக்குடி, நாச்சியாபுரம், கொரட்டி, தட்டட்டி என சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த 5000-க்கும் மேற்பட்டோா் இந்த மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டனா். இதில் 15 போ் காயமடைந்தனா்.

உரிய அனுமதி பெறாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக, 5 போ் மீது நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com