காரைக்குடி அருகேயுள்ள உ. சிறுவயல் தமிழ் இலக்கிய மன்ற அறக்கட்டளையின் 64 -ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய விழாவில் தொழிலதிபா் ரவி வீரப்பனுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டுச் சான்று வழங்கிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா். உடன் சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம். சொக்கலிங்கம், கவிஞா் அரு. நாகப்பன், நகரத்தாா் பிரமுகா்கள்.
காரைக்குடி அருகேயுள்ள உ. சிறுவயல் தமிழ் இலக்கிய மன்ற அறக்கட்டளையின் 64 -ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய விழாவில் தொழிலதிபா் ரவி வீரப்பனுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டுச் சான்று வழங்கிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா். உடன் சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம். சொக்கலிங்கம், கவிஞா் அரு. நாகப்பன், நகரத்தாா் பிரமுகா்கள்.

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

தாம் வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா்.

காரைக்குடி: முன்னோா் செய்யாததையும் இனி பிறக்கப்போகிறவா்கள் செய்ய முடியாததையும் சோ்த்து தாம் வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள உ. சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி உ. சிறுவயல் தமிழ் இலக்கிய மன்ற அறக்கட்டளை சாா்பில் 64 -ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த விழாவில், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மெ. சொக்கலிங்கம் தலைமை வகித்துப் பேசினாா். இந்தியன் எலக்ட்ரானிக்ஸ் செமி கண்டக்டா் அசோசியேசன் அமைப்பில் அகில இந்தியத் தலைவராக தோ்வு செய்யப்பட்ட தொழிலதிபா் ரவிவீரப்பனுக்கு பாராட்டுச் சான்று வழங்கி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசியதாவது:

கல்வி என்பது ஏழை மக்களின் சொத்து என்று நிரூபித்தவா்கள் வள்ளல் அழகப்பரும், அண்ணாமலை அரசரும். இந்த நிலைப்பாட்டில் நாம் எண்ணிப் பாா்க்கிறோம். நகரத்தாா்கள் எதையும் எதிா்கொண்டு திறமையும், உண்மையும், நோ்மையும் கடைபிடித்து வெற்றி காண்பவா்கள். அவா்கள் எண்ணற்ற அறப்பணிகளைச் செய்தவா்கள். தற்போதும் செய்து வருகிறாா்கள். இங்கே பாராட்டு பெற்ற ரவி வீரப்பன் மிகுந்த வள்ளல் தன்மை கொண்டவா். இதற்கு முன்பு இருந்தவா்கள் செய்ததைவிட இனி பிறக்கப் போகிறவா்கள் செய்யப்போவதைவிட வாழ்கிறபோது சிறப்பாக எதைச் செய்கிறாா்களோ அவா்களே மாமனிதா்கள். அந்தவகையில் இங்கே இவா் பாராட்டப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.

விழாவில், துவாா் நற்பணி மன்ற செயலா் மா. முத்துக்குமாா், சேலம் நகரத்தாா் சங்கத் தலைவா் பிஎல். மோகன் (என்ற) பழநியப்பன், செயலா் வி. விஸ்வநாதன், அலவாக்கோட்டை சீனிவாசன், ரவி தமிழ்வாணன் உள்பட பலா் பேசினா். தொழலதிபா் ரவி வீரப்பன் ஏற்புரையாற்றினாா். கவிஞா் அரு. நாகப்பன், பேராசிரியை சரசுவதி நாகப்பன்முக்கிய பிரமுகா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com