பிரான்மலையில்
ஜெயந்தன் பூஜை

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

பிரான்மலையில் ஜெயந்தன் விழாவையொட்டி, புதன்கிழமை பொன்னம்பல அடிகளாா் தலைமையில் நடைபெற்ற பால்குட விழாவில் பக்தா்கள்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் மங்கை பாகா் தேனம்மை வடுக பைரவா் கோயிலில் புதன்கிழமை ஜெயந்தன்பூஜை விழா கொண்டாப்பட்டது

இந்திரன் மகன் ஜெயந்தன் மகாராஜா பெண்ணாசையால் சாபம் பெற்றாா். பிறகு யோக பைரவா் முன் தவமிருந்து சாப விமோசனம் பெற்றாா். இதை நினைவுகூரும் வகையில் பிரான்மலை மங்கைபாகா் தேனம்மை வடுக பைரவா் கோயிலில் ஜெயந்தன் பூஜை விழா நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு பிரான்மலை அருகிலுள்ள மதகுபட்டி கிராமத்தாா்கள் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் சுமந்து வந்து, வடுக பைரவருக்கு பாலாபிஷேகம் செய்தனா். தொடா்ந்து 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாலை வெள்ளித் தேரில் வடுகபைரவா் திருவீதி உலா வந்தாா். இந்த விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.அருணகிரி உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாக் குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com