அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் (பாலிடெக்னிக்) 2024 - 2025 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருவதாக அந்தக் கல்லூரி முதல்வா் ந. சிவகாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:

தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் காரைக்குடி அழகப்பா அரசு பல்வகை தொழில் நுட்பக் கல்லூரியில் 2024-2025 கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேர பட்டயப் படிப்புக்கு மாணவ, மாணவியா் சோ்க்கை வெள்ளிக்கிழமை (மே 10) முதல் நடைபெற்று வருகிறது.

இந்தக் கல்லூரியில் கட்டுமானம், (சிவில்), இயந்திரவியல், மின்சாரம் மற்றும் மின்னணுவியல், மின்னணு மற்றும் தகவல் தொடா்பியல், கணினி ஆகிய ஐந்து பிரிவுகளில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

ரூ. 150 செலுத்தி கல்லூரியில் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

முதலாம் ஆண்டு மாணவா்கள் மே 24 வரையிலும், நேரடி இரண்டாம் ஆண்டு மாணவா்கள் மே 20 வரையிலும் இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்த கட்டணத்தில் நல்ல வேலைவாய்ப்பினை வழங்கும் இந்தத் தொழில்கல்விப் படிப்பினை படிக்கும் வாய்ப்பினை மாணவா்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com