"இளைஞர்களால் எய்ட்ஸ் இல்லாத  சமுதாயத்தை உருவாக்க இயலும்'

இளைஞர்களால் எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்க இயலும் என, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய இயக்குநர் ப. கார்த்திக் கூறினார்.

இளைஞர்களால் எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்க இயலும் என, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய இயக்குநர் ப. கார்த்திக் கூறினார்.
    தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி செஞ்சுருள் சங்கம் ஆகியன இணைந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.
      நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் சீ. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
இதில், அவர் மேலும் பேசியதாவது: ஆப்பிரிக்காவில் குரங்கிலிருந்து மனிதனுக்கு இந்த நோய் தொற்றியதாக ஆய்வுகள் கூறுகின்றன. நமது நாட்டில் 1981ஆம் ஆண்டு ஹெச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் 1986 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.      தொடக்க காலத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், தமிழகத்தில் ஏராளமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டனர். தற்போது, அரசு மருத்துவமனை உள்ளிட்டவை இடங்களில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கென தனியே ஆலோசனை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இதனால், தற்போது இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் குறைந்து வருகின்றனர்.      பல தொண்டு நிறுவனங்களும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் கிராமங்களிலும் நடத்தப்படுகின்றன. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஒதுக்கிவிடக்கூடாது, அவர்களிடம் பரிவு காட்ட வேண்டும்.
    எய்ட்ஸினால் பாதிக்ப்பட்ட பல பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதால், பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் நினைத்தால் எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்க இயலும் என்றார்.    இதில், மதுரை பல்கலைக்கழக செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் எம். பாண்டி, விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். விழிப்புணர்வு முகாமில், பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com