சிவகாசியில் கண்தான விழிப்புணர்வு போட்டிகள்

சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் சார்பில், 33 ஆவது தேசிய கண் தான இரு வார விழாவினையொட்டி, சிவகாசியில் வெள்ளிக்கிழமை

சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் சார்பில், 33 ஆவது தேசிய கண் தான இரு வார விழாவினையொட்டி, சிவகாசியில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான கண் தான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியை, சங்கத்தின் பட்டயத் தலைவரும், விருதுநகர் மாவட்ட கண் தான தலைவருமான ஜெ. கணேஷ் தொடக்கிவைத்தார். இதில், தானத்தில் சிறந்தது கண் தானம் என்ற தலைப்பில் பள்ளிகள் அளவில் நடைபெற்ற கவிதைப் போட்டியில், சிவகாசி வி.எஸ்.கே.டி. பெண்கள் பள்ளியின் ஆர். அக்ஷயா முதலிடமும்,  திருத்தங்கல் எஸ்.என்.ஜி. பெண்கள் பள்ளி பவதாரணி மற்றும் எம். ஐஸ்வர்யா ஆகியோர் இரண்டாமிடமும், சிவகாசி காமராஜர்  பள்ளி ஆர். கஜலட்சுமி மூன்றாமிடமும் பெற்றனர்.
கண் தான விழிப்புணர்வு குறித்த விநாடி-வினா போட்டியில், சிவகாசி எஸ்.ஹெச்.என்.வி. மெட்ரிக். பள்ளி எஸ். ஹரிபிரசாத், ஸஸ். தரிப்முகமது ஆகியோர் முதலிடமும், ராஜபாளையம் ஏஞ்சல் கல்வியியல் கல்லூரி ஜி. மாலதி , எஸ். நிவேதா ஆகியோர் இரண்டாமிடமும் பெற்றனர்.
கண் தானத்தை வலியுறுத்தும் வண்ண கோலப் போட்டியில், சிவகாசி ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வி. ரமேஷ், வி. ரமேஷ்குமார், சிவகாசி ஒய்.ஆர்.டி.வி. மெட்ரிக். பள்ளி பி.அக்ஷயா, வி. இஷாஹரிணி ஆகியோர் முதலிடமும், விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரி பி. கலைவாணி, எஸ். பிரகதீஸ்வரி ஆகியோர் இரண்டாமிடமும், சிவகாசி பெண்கள் மேல்நிலைப் பள்ளி என். ருக்மணி,  ஏ. காவியா ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர்.
ஓவியப் போட்டியில், சிவகாசி ரோட்டரி மெட்ரிக். பள்ளி கே. காவியா முதலிடமும், சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி ஏ. அழகுலட்சுமி இரண்டாமிடமும், சிவகாசி வி.எஸ்.கே.டி. பெண்கள் பள்ளி எஸ். வைஷ்ணவி மூன்றாமிடமும் பெற்றனர். 
கட்டுரைப் போட்டியில், பள்ளிகள் அளவில் சிவகாசி ஒய்.ஆர்.டி.வி. மெட்ரிக். பள்ளி ஆர். கார்த்திகா முதலிடமும், கல்லூரி அளவில் சிவகாசி அய்யநாடரர் ஜானகி அம்மாள் கல்லூரி எஸ். மணிகண்டன் முதலிடமும் பெற்றனர்.
    கல்லூரிகள் அளவிலான கவிதைப் போட்டியில், ராஜபாளையம் ஏஞ்சல் கல்வியியல் கல்லூரி இ. பிரவீண்குமார் முதலிடமும் மற்றும் அதே கல்லூரி எஸ். சாந்தகுமாரி, மேட்டமலை பி.எஸ்.என்.எல். கல்வியியல் கல்லூரி எம். காவியா ஆகியோர் இரண்டாமிடமும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ஜி. கலா மூன்றாமிடமும் பெற்றனர்.
 பரிசளிப்பு விழாவுக்கு, சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கத் தலைவர் ஏ. உலகநாதன் தலைமை வகித்தார். அரிமா சங்க மாவட்ட ஆளுநர் கே.ஜி. பிரகாஷ், திருநெல்வேவி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ஆர். ராமகிருஷ்ணன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினர். முன்னதாக, செயலர் கே. ஞானகிரி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் என். தனசேகரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com