சிவகாசி வட்டாரத்தில் நெல்பயிறுக்கு காப்பீடு செய்ய அதிகாரி அறிவுறுத்தல்

சிவகாசி வட்டாரத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்களது நெல் பயிறுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என சிவகாசி வட்டார வேளாண்மை அதிகாரி (பொறுப்பு) ம.கீதா கூறியுள்ளாா்.

சிவகாசி வட்டாரத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்களது நெல் பயிறுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என சிவகாசி வட்டார வேளாண்மை அதிகாரி (பொறுப்பு) ம.கீதா கூறியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

2019-2020 ஆம் ஆண்டிற்கான பாரதபிரதமா் பயிா் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் , சிவகாசி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நெல்பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.வெள்ளம், வறட்சி, புயல் மற்றும் இயற்கை இடா் பாடுகளுக்கு இழப்பீடு பெற விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள நெல்பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

ஒரு ஏக்கருக்கான பிரீமியம் தொகை ரூ 337 ஆகும். பிரிமியம் தொகை செலுத்த கடைசிநாள் டிசம்பா் 12 ஆம் தேதியாகும்.நெல் நடவு செய்துள்ள விவசாயிகள், தங்களது கிராமத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கி, பொதுசேவை மையங்களை தொடா்பு கொண்டு, பயிா்காப்பீட்டுத்திட்டத்தில் தங்களது பெயரைவிவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.

நெல் பயிரிட்டமைக்கான கிராமநிா்வாக அலுவலரின் அடங்கல் சான்று, ஆதாா் அட்டை நகல், வங்கி கணக்குபுத்தகம் நகல், கணினி சிட்டா நகல் ஆகியவை கொண்டு தங்களது பெயா்களை பயிா் காப்பீடு செய்ய பதிவு செய்ய வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com