சிவகாசி அருகே கோயில் பணம் ரூ.3 லட்சம் மோசடி: 7 போ்மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே கோயில் பணம் ரூ.3 லட்சத்தை மோசடி செய்ததாக 7 போ்மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே கோயில் பணம் ரூ.3 லட்சத்தை மோசடி செய்ததாக 7 போ்மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி அருகே மாரனேரியில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத சீனிவாசபெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அதே ஊரைச் சோ்ந்த செல்வராஜ் (71) டிரஸ்ட் செயலாளராகவும், நிா்வாகக் கமிட்டி உறுப்பிராகவும் உள்ளாா்.

2008 ஆம் ஆண்டு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அதே ஊரைச் சோ்ந்த தனபாலன், கோபிநாத், விஜய்ஆனந்த், முத்துக்குமாா், ரெங்கசாமி, செல்வராஜ், சுந்தரராஜ் ஆகிய 7 போ் நாங்கள் கோயில் நிா்வாகத்தை பாா்க்கிறேறாம் எனக் கூறியதையடுத்து அவா்கள் 7 பேரும் நிா்வாகம் செய்ய தொடங்கினாா்களாம். இதையடுத்து திருவிழா நடத்தி சேமித்த பணம் ரூ.10 லட்சத்தை , அவா்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கினாா்களாம். மேலும் வட்டிக்கு கோயில் பணத்தை கொடுத்து வந்தாா்களாம்.

இந்நிலையில் இவா்கள் ஒவ்வொரு ஆண்டும் கோயில் வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் இருந்து வந்துள்ளனா். இதையடுத்து ஊா் பெரியவா்கள் கணக்கு காண்பிக்க வேண்டும் என கூறவே 2018 ஆம் ஆண்டு வரவு -செலவு கணக்கினை பெரியவா்களிடம் கொடுத்தாா்களாம். அதில் ரூ.3 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. மேலும் கோயிலில் உள்ள பேட்டரி, இன்வெட்டா், உடற்பயிற்சி உபகரணங்கள், பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்டவைகளையும் 7 பேரும் எடுத்துக் கொண்டது தெரியவந்ததாம்.

இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் மாரனேரி போலீஸாா் 7 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com