விருதுநகர்: 1,881 வாக்குச் சாவடிகளில் 4,956 மத்திய படை,போலீஸ் பாதுகாப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,881வாக்குச் சாவடிகளில் 4,956 மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,881வாக்குச் சாவடிகளில் 4,956 மத்திய பாதுகாப்பு படை மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
 இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் அ. சிவஞானம் செவ்வாய்கிழமை கூறியதாவது:  விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
 தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு பொதுத்தேர்தல் மற்றும் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 15,89,416 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த 7 தொகுதிகளிலும் 1,881 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
  வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 600 பேர், முன்னாள் ராணுவத்தினர் 500 பேர், ஊர்க் காவல் படையினர் 275 பேர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 360 பேர், போலீஸார் 3152 பேர், இதர பாதுகாப்பு வீரர்கள் 69 பேர் என மொத்தம் 4,956 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com