ராஜபாளையம் தொகுதியில்  தேர்தல் பணியில் 1,346 பேர்: 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில்

தென்காசி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 261 வாக்குச் சாவடியில் தேர்தல் பணியில் 1,346 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில், 1 லட்சத்து 10 ஆயிரத்து 941 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 190 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 156 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க இத் தொகுதியில் மொத்தம் 261 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இவற்றிற்குத் தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் என மொத்தம் 988 இயந்திரங்கள் கடந்த மாதம் 25 ஆம் தேதி ராஜபாளையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயா, வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் தேர்தல் பணிக் குழுவினர் இயந்திரங்களை சரி பார்த்த பின்னர், அவை ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பாதுகாப்பாக வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன. 
மக்களவைத் தேர்தலையொட்டி 261 வாக்குச் சாவடிகளுக்கும் அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப் பட்டன. இவற்றுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகளும் கொண்டு செல்லப் பட்டன. 
இத் தொகுதியில்  1, 346 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 19 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனவும், நக்கனேரியில் உள்ள ஒரு வாக்குச் சாவடி மிக பதற்றமானது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 
     இதையடுத்து, இந்த 20 வாக்கு சாவடிகளுக்கும் தலா ஒரு நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த 20 வாக்குச் சாவடிகள் உள்பட மொத்தம் 83 வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
   இதன் மூலம் விருதுநகர், நெல்லை மற்றும் தென்காசியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்குப் பதிவை நேரடியாக கண்காணிப்பர் என வட்டாட்சியர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com