பெரியகொல்லபட்டி கிராமத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

பெரியகொல்லபட்டி கிராமத்தில் குடியிருப்பு அருகே தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியகொல்லபட்டி கிராமத்தில் குடியிருப்பு அருகே தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 சாத்தூர் அருகே பெரியகொல்லபட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்பட வில்லை. மேலும் இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு அருகே அதிகமாக குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. 
ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையான குப்பைத் தொட்டி வைக்கப்படாததால் சாலையோரத்திலும், குடியிருப்பு அருகேயும் குப்பைகள் அதிகமாக தேங்கிக் கிடக்கின்றன. மேலும் பல்வேறு இடங்களில் சேரும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அள்ளுவதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 
அத்துடன் இப்பகுதியில் சுகாதார சீர்கேடும், அதிக அளவில் துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் இந்த பகுதியில் செல்லும் வாருகால்களில் கழிவுநீர் செல்லமால் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
எனவே இந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்பு அருகே தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். வாருகாலில் கழிவுநீர் தேங்காதவாறு முறையாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com