மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 2 பணி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 2 பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்க அனுமதி கோரிய

மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 2 பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்க அனுமதி கோரிய வழக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகரைச் சேர்ந்த ரஞ்சித் தாக்கல் செய்த மனு:  கடந்த ஆண்டு பிப்ரவரியில் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை 2 பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியானது. அதில் 133 காலிப்பணியிடங்கள் இருந்தன. இதற்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக பிளஸ் 2 மற்றும் ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ பட்டம், மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  பி.இ. மெக்கானிக்கல் முடித்துள்ள நான், வாகன ஆய்வாளர் நிலை 2 பணிக்கு விண்ணப்பித்துத் தேர்வு எழுதினேன். அதில் 200 மதிப்பெண்கள் பெற்று நேர்முகத்தேர்விற்கு தகுதி பெற்றேன். இந்நிலையில் 133 காலிப்பணியிடங்களுக்கான தேர்வில் 33 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நான் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. எனவே நேர்முகத்தேர்வில் என்னை பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் தரப்பில், இதேபோன்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com