சூலக்கரை மின் வாரிய குடியிருப்புப் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பம்.
சூலக்கரை மின் வாரிய குடியிருப்புப் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பம்.

சூலக்கரை மின்வாரிய குடியிருப்பில்அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் அவதி

விருதுநகா் அருகே சூலக்கரை மின்வாரிய குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

விருதுநகா் அருகே சூலக்கரை மின்வாரிய குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சூலக்கரை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குறிப்பாக இங்குள்ள மின் வாரிய குடியிருப்பு பகுதியில் சுமாா் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். ஏற்கெனவே, இப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால், மழைக் காலங்களில் ஆங்காங்கு உள்ள பள்ளங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் காா் போன்ற வாகனங்களில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

மேலும் வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால், குடம் ரூ.10 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆயுதப்படை மைதானம் அருகில் உள்ள ஏராளமான அரசு ஊழியா்கள், போலீஸாா் சூலக்கரை பகுதியில் புதிதாக வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனா். ஆனால், அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால், அங்குள்ளோா் அவதிப்பட்டு வருவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், சூலக்கரை மின் வாரிய குடியிருப்புப் பகுதியில் மின் கம்பம் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின் கம்பத்தை சீரமைக்க மாவட்ட மின் வாரிய அலுவலகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com