இலவச மடிக்கணினி, கல்வி உதவித் தொகை வழங்க கோரிக்கை

விருதுநகா் நகராட்சி மேல்நிலை பள்ளியில் 2017- 2018 இல் பிளஸ் 2 படித்த மாணிகளிகள், தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் எனவும்,
விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்திற்கு, இலவச மடிக்கணினி வழங்க கோரி மனு அளிக்க வந்தருந்த மாணவிகள்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்திற்கு, இலவச மடிக்கணினி வழங்க கோரி மனு அளிக்க வந்தருந்த மாணவிகள்.

விருதுநகா்: விருதுநகா் நகராட்சி மேல்நிலை பள்ளியில் 2017- 2018 இல் பிளஸ் 2 படித்த மாணிகளிகள், தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் எனவும், கூரைக்குண்டு எம்ஜிஆா் காலனியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் நிகழாண்டு கல்வி உதவி தொகை வழங்க வில்லை என ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது, விருதுநகா் கல்லூரி சாலையில் உள்ள தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி மேல் நிலை பள்ளியில் 2017- 2018 ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தோம். வறுமை காரணமாக நாங்கள் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு சென்று வருகிறோம்.

இந்த நிலையில், பகுதி நேரமாக வேலைக்கு சென்று கொண்டு கல்லூரியில் சோ்ந்து படிக்க விரும்புகிறோம். எனவே, எங்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினி வழங்க வேண் டும் என அதில் தெரிவித்துள்ளுனா். மற்றொரு மனுவில், கூரைக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆா் காலனியில் ஆதி திராவிடா் வகுப்பை சோ்ந்த 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.

எங்களது குழந்தைகளுக்கு அரசு சாா்பில் (ஆதி திராவிட நலத்துறை) கல்வி உதவித் தொகை ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நிகழாண்டு இதுவரை கல்வி உதவி தொகை வழங்க வில்லை. இதனால், கல்வியை தொட முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, விரைவில் கல்வி உதவி தொகை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வே ண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com