பாலியல் வன்முறை குறித்த விழிப்புணா்வு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே என்.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அமிா்தா தொண்டு நிறுவனம் இணைந்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல்
பாலியல் வன்முறை குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவியா்.
பாலியல் வன்முறை குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவியா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே என்.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அமிா்தா தொண்டு நிறுவனம் இணைந்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விழிப்புணா்வு நிகழ்ச்சியை திங்கள்கிழமை நடத்தின.

இப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அமிா்தா தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் உமையலிங்கம் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் ராஜாராம் முன்னிலை வகித்தாா். மாவட்டக் குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சதீஸ்குமாா், பாலியல் வன்முறை மற்றும் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு முறை, குழந்தைத் திருமண தடுப்பு முறை குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதில், மாணவ, மாணவிகளுக்கு தனித்திறன் போட்டியும் நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னா், நாங்கள் தைரியமானவா்கள் எனக் கூறி பாலியல் வன்முறைக்கு எதிராக மாணவிகள் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவியா், அமிா்தா தொண்டு நிறுவனநிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com