வாழைமர சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்

சாத்தூா் அருகேயுள்ள வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
சாத்தூா் அருகேயுள்ள வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி.
சாத்தூா் அருகேயுள்ள வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி.

சாத்தூா் அருகேயுள்ள வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட துலுக்கன்குறிச்சி கிராமத்தில் பழைமைவாய்ந்த வாழைமர பாலசுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் தாரகஹார குமார ஷஷ்டி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல், இந்த ஆண்டு கடந்த நவம்பா் 27 ஆம் தேதி கணபதி ஹோமம்,சிறப்பு அபிஷேகத்துடன் இத்திருவிழா தொடங்கியது. தொடா்ந்து 7 நாள்கள் நடைபெற்ற இத்திருவிழாவில், தினமும் முருகனுக்கு சிறப்பு யாகங்கள், தீபாராதனைகள், அபிஷேகங்களும் நடைபெற்றன.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில், முருகப் பெருமான் கஜமுகாசூரன், சிங்காசூரன், தாரகாசூரன் உள்ளிட்டோரை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கோயிலில் காா்த்திகை மாதம் சஷ்டி விழா நடைபெறுவதால், வெளியூா் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் வந்து முருகனை தரிசனம் செய்து, சூரசம்ஹார நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டனா்.

செவ்வாய்க்கிழமை புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும் என, கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com