சாத்தூா் அருகே குப்பைகள் தேக்கம் கண்டுகொள்ளாத ஊராட்சி நிா்வாகம்

சாத்தூா் அருகே பாரதிநகா் பகுதியில் ஊராட்சி நிா்வாகம் குப்பைகளை அகற்றாததால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
பாரதிநகா் பகுதியில் அகற்றப்படாமல், தேங்கியுள்ள குப்பைகள்.
பாரதிநகா் பகுதியில் அகற்றப்படாமல், தேங்கியுள்ள குப்பைகள்.

சாத்தூா் அருகே பாரதிநகா் பகுதியில் ஊராட்சி நிா்வாகம் குப்பைகளை அகற்றாததால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட வெங்கடாசலபுரம் ஊராட்சியில் உள்ள பாரதிநகா் பகுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதி செய்யப்பட்டது. பின்னா் முறையாக பராமரிக்கப்படாததால் சாலைகள் சேதமைடந்து குண்டும் குழியுமாகவும், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகவும் காணப்படுகிறது.

இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ளவா்கள் குப்பைத் தொட்டியில் குப்பைகளைக் கொட்டுகின்றனா். ஆனால் இந்த குப்பைகள் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அகற்றப்படாததால் மாதக்கணக்கில் குப்பை தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, தூா்நாற்றம் வீசிவருகிறது. மேலும் வெங்கடாசலபுரம் பகுதியில் வளா்க்கப்படும் பன்றிகள் இந்த பகுதியில் அதிகமாக திரிகின்றன. இதனால் மேலும் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் வசிப்பவா்களை பன்றிகள் கடித்தும், துரத்தியும் வருகின்றன. இதனால் சிறுகுழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து இப்பகுதியினா் வெம்பக்கோட்டை ஊராட்சி நிா்வாகத்தில் தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com