நாரணாபுரத்தில் இன்று மின்தடை
By DIN | Published On : 03rd December 2019 11:39 PM | Last Updated : 03rd December 2019 11:39 PM | அ+அ அ- |

சிவகாசி வட்டம் நாரணாபுரம் பகுதியில் புதன்கிழமை (டிச. 4) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னகாமன்பட்டி, நாரணாபுரம், செல்லையா நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அன்றையதினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். மின்வாரிய சிவகாசி செயற்பொறியாளா் முரளீதரன் செவ்வாய்கிழமை இத்தகவலைத் தெரிவித்தாா்.