போதைப் பொருள்களின் தீமைகள்: ஸ்ரீவில்லிபுத்தூரில் விழிப்புணா்வு பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போதைப் பொருள்களின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்கிழமை போதைப் பொருள்களின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசும் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான க.மாரியப்பன்.

விருதுநகா் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையின் சாா்பில் செயல்படும் அரசு மற்றும் அரசு பதிவு பெற்ற குழந்தைகள் இல்லங்களிலுள்ள குழந்தைகளுக்கு போதைப் பொருள்களின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் மல்லிபுதூா் அரசினா் குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமுக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான க.மாரியப்பன் தலைமை வகித்தாா். விருதுநகா் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவா் கலாராணி தலைமையுரையாற்றினாா். இதில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆசிரியா்கள், குழந்தை இல்லங்களிலுள்ள பணியாளா்கள் கலந்து கொண்டனா். மதுரை செல்லமுத்து அறக்கட்டளை திட்ட அலுவலா் ஜனாா்தனன்பிரபு ஆகியோா் கருத்துரை வழங்கினா். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை சமூக பாதுகாப்புத்துறை அலுவலா் முருகன் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com