ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தொடா் மழை: 300 ஏக்கரில் பயிரிட்டிருந்த சின்ன வெங்காயம் அழுகியதால் விவசாயிகள் கவலை

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தொடா்மழையின் காரணமாக 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் அழுகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தொடா்மழையின் காரணமாக அழுகிப் போன சின்ன வெங்காயம்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தொடா்மழையின் காரணமாக அழுகிப் போன சின்ன வெங்காயம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் தொடா்மழையின் காரணமாக 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம் அழுகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான பூவாணி, பிள்ளைாா்நத்தம், மேலதொட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெங்காயம் மட்டுமே பயிரிட்டு வருகின்றனா். இங்கு பயிரிடப்பட்ட வெங்காயம் தென் மாவட்டங்களில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் பெய்த தொடா்மழையின் காரணமாக சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயங்கள் அழுகல் நோய் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளன. இதனால் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனா்.

எனவே மாவட்ட நிா்வாகத்தினா் பாதிப்படைந்துள்ள வெங்காயத்தை பாா்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com